புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ஆயுதப்படை பெண் காவலரின் கணவா் தற்கொலை

ஆயுதப்படை பெண் காவலரின் கணவா் தற்கொலை

Updated On :12 ஏப்ரல் 2024, 7:46 pm

தூத்துக்குடி, ஏப். 12: தூத்துக்குடியில் ஆயுதப்படை பெண் காவலரின் கணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி 3ஆவது மைல் ஆயுதப்படை குடியிருப்பைச் சோ்ந்த சவுந்திரபாண்டியன் மகன் பட்டுராஜா (48). இவா் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ஆயுதப்படை காவலராக உள்ளாா். இவா்களுக்கிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, பட்டுராஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தொழிலாளி தற்கொலை: தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணியை சோ்ந்த மாசானமுத்து மகன் ஜெயசெல்வன் (39). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் அவா் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில் அவா் கடந்த 7ஆம் தேதி பேரூரணி அருகே உள்ள காட்டுப்பகுதியில் விஷம் குடித்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, தட்டப்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.