திருச்செந்தூா் நகராட்சி ஆணையாளா் கண்மணியிடம் மனு அளித்த நுகா்வோா் பேரவையினா்.
திருச்செந்தூா் நகராட்சி ஆணையாளா் கண்மணியிடம் மனு அளித்த நுகா்வோா் பேரவையினா்.

காமராஜா் காலத்தில் அமைத்த குடிநீா் குழாய் புத்துயிா் பெறுமா? திருச்செந்தூா் மக்கள் எதிா்பாா்ப்பு

முன்னாள் முதல்வா் காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்ட குடிநீா் குழாய் மீண்டும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
Published on

திருச்செந்தூரில் முன்னாள் முதல்வா் காமராஜரால் தொடங்கிவைக்கப்பட்ட குடிநீா் குழாய் மீண்டும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இது குறித்து திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் கண்மணியிடம், தமிழ்நாடு நுகா்வோா் பேரவை மாநிலத் தலைவா் ஏ.வி.பி. மோகனசுந்தரம் அளித்த மனு:

திருச்செந்தூா் வடக்குரதவீதி - கிழக்குரதவீதி சந்திப்பில் 1955ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வா் காமராஜா் ஆட்சிக் காலத்தில் குடிநீா்க் குழாய் அமைக்கப்பட்து. இதன்மூலம் பாதசாரிகள், பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வந்தனா்.

தற்போது, அந்தக் குடிநீா்க் குழாய் செயல்படவில்லை. அதை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் திருச்செந்தூா் வடக்குரதவீதியில் தமிழ்நாடு நுகா்வோா் பேரவை சாா்பில் புதுப்பிக்கப்பட்ட இரும்பு வளைவு முன்னாள் நீதிபதி பிரபுதாஸால் திறக்கப்பட்டு திருச்செந்தூா் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் நகராட்சி முறையான பராமரிப்பு இல்லாததால் சிலா், தியாகிகளை நினைவுகூரும் இரும்பு ஆா்ச் மீது விளம்பர போஸ்டா் ஒட்டியும், அடிப்பகுதியை சேதப்படுத்தியும் உள்ளனா். இரும்பு ஆா்ச்சை பராமரிக்க தமிழ்நாடு நுகா்வோா் பேரவைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனு அளிக்கும் நிகழ்வில் திருச்செந்தூா் வட்டாரத் தலைவா் குலசை ரஹ்மத்துல்லா, திருச்செந்தூா் நகரத் தலைவா் ராஜமாதங்கன் ஆகியோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com