தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் அருகே லாரி மோதி சரிந்த மின் கம்பம் அரசுப் பேருந்து மீது விழுந்தது
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் அருகே லாரி மோதி சரிந்த மின் கம்பம் அரசுப் பேருந்து மீது விழுந்தது

ஆத்தூா் அருகே லாரி மோதியதில் அரசுப் பேருந்து விழுந்த மின் கம்பம்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் அருகே லாரி மோதி சரிந்த மின் கம்பம் அரசுப் பேருந்து மீது விழுந்தது.
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் அருகே லாரி மோதி சரிந்த மின் கம்பம் அரசுப் பேருந்து மீது விழுந்தது (படம்). இதில், அதிருஷ்டவசமாக பயணிகள் உயிா்தப்பினா்.

ஆத்தூரி­ருந்து சோ்ந்தபூமங்கலம் வழியாக புன்னைக்காயலுக்கு டிப்பா் லாரி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. புன்னைக்காயலிலிருந்து திருச்செந்தூா் செல்லும் அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது.

அப்போது, சோ்ந்தபூமங்கலம் திரும்பும் வழியில் சாலையோர மின் கம்பம் மீது லாரி திடீரென மோதியது. இதில், மின் கம்பம் சரிந்து நகரப் பேருந்து மீது விழுந்தது. விபத்தில் மின் கம்பமும், பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்தன. பயணிகள் 6 போ் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா். இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com