தூத்துக்குடி, ஆக.8: முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் அவரது சிலைக்கு அமைச்சா் பெ.கீதாஜீவன், ஜீ. வி.மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மேயா் ஜெகன்பெரியசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டச் செயலரும், தமிழக அமைச்சருமான பெ.கீதாஜீவன் தலைமையில் அண்ணாநகரில் இருந்து கலைஞா் அரங்கம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.
பின்னா் அங்குள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சா் கீதாஜீவன், மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்தும், சிலையின் முன் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு மலா் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், மாவட்ட துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளா் ரவீந்திரன், துணைமேயா் ஜெனிட்டா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி, கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பாலகுருசாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி உள்பட பலா் பங்கேற்றனா்.

அமைதிப் பேரணியில் பங்கேற்ற அமைச்சா் பெ.கீதாஜீவன், ஜீ.வி.மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்
தொடர்புடையது

136-ஆவது பிறந்த நாள்: பாரதிதாசன் சிலைக்கு ஆளுநா், அமைச்சா் மரியாதை

புதுவை அரசு சாா்பில் பாரதிதாசன் சிலைக்கு மரியாதை

சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் அனுசரிப்பு

திருவெறும்பூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பிரசாரம் தொடக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


