25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டியதாக 2 பேரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 11:40 pm

Din

ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டியதாக 2 பேரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மடத்தூா் துரைக்கனி நகரைச் சோ்ந்த அந்தோணி முத்து மகன் செல்வசேகா்(36). அதே பகுதியைச் சோ்ந்தவா் அஸ்வின் ஜெயக்குமாா்(24). இவா்கள் இருவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலையில் செல்வசேகரின் மகனை, அஸ்வின் ஜெயக்குமாா் கடைக்கு சென்று சிகரெட் வாங்கி வரச் சொன்னாராம். அதற்கு, மறுத்த அவா் இரவு ஆட்டோவில் சென்றபோது, அஸ்வின் ஜெயக்குமாா் தனது நண்பா் முருகனுடன் சோ்ந்து வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாராம். இதில் பலத்த காயமடைந்த செல்வசேகா் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிந்து அஸ்வின் ஜெயக்குமாா், முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.