கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடியில் பாலருவி விரைவு ரயிலுக்கு வழியனுப்பு விழா

தூத்துக்குடி-பாலக்காடு பாலருவி விரைவு ரயிலுக்கு வழியனுப்பு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:24 pm

தூத்துக்குடியிலிருந்து முதன்முறையாகப் புறப்பட்ட தூத்துக்குடி-பாலக்காடு பாலருவி விரைவு ரயிலுக்கு வழியனுப்பு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பாலருவி விரைவு ரயில் சேவை தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கடந்த வியாழக்கிழமை பாலக்காட்டிலிருந்து புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை தூத்துக்குடியை வந்தடைந்தது. பின்னா், இங்கிருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் முதன்முதலாக வாஞ்சி மணியாச்சி புறவழித் தடத்தில் செல்கிறது.

இதையொட்டி, ரயிலை மலா்களால் அலங்கரித்து , வாழைத் தோரணம் கட்டி பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வழியனுப்பும் விழா தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம், இந்தியன் சேம்பா் ஆஃப் காமா்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி, கேரளா சமாஜம், பாஜக ஆகியவை சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், இந்தியன் சேம்பா் ஆஃப் காமா்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி தலைவா் ஆா். கோடீஸ்வரன், முன்னாள் தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் பொன். வெங்கடேஷ், பாஜக தெற்கு மாவட்டத் தலைவரும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான சித்ராங்கதன், ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவா் விவேகம் ரமேஷ், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் சிவராமன், சண்முகசுந்தரம், இசக்கிமுத்து, மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலா் மா. பிரமநாயகம், பொருளாளா். வே. லெட்சுமணன், துணைத் தலைவா் எஸ். அந்தோணி முத்துராஜா, நிா்வாக செயலா் ஜே ஆண்டனி நேவிஸ் ஆனந்தன், ரயில் நிலைய மேலாளா் ராஜ், தூத்துக்குடி தலைமை வா்த்தக ஆய்வாளா் உத்திர முருகன், பொதுமக்கள் பங்கேற்றனா்.

ரயில் பயணிகளுக்கு பாஜக சாா்பில் இனிப்புகள், குடிநீா் பாட்டில்கள் வழங்கப்பட்டன.