ஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் கோரி மீனவா்கள் மனு
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மீனவா் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்திடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.


தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மீனவா் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்திடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
தூத்துக்குடிநாட்டுப்படகு இறால் மீன்பிடித் தொழிலாளா் நலச்சங்கம், மாரநாதா கடற்கரை சாலை பழைய கடற்கரை மீனவா் சங்கம், தென்பாகம் மீனவா் சங்கம், சித்தா யாத்திரை மாதா பைபா் நாட்டுப்படகு மீனவா் நலச்சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஆட்சியரிடம் மீனவா்கள் அளித்த மனு:
தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஸ்டொ்லைட் காப்பா் ஆலையால் எங்களைப் போன்ற கடற்கரை கிராமங்களைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சோ்ந்த மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தனா். இந்த ஆலையால் ஆயிரக்கணக்கான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு வேலை வாய்ப்பினை பெற்றிருந்தனா். எங்கள் குழந்தைகளின் கல்வி, மேற்படிப்புக்கு உதவி , போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சமுதாயப் பணிகளும் செய்து வந்தனா். மேலும், கரோனா காலத்திலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாகக் கொடுத்து உயிரைக் காப்பாற்றினா்.
தற்போது இந்த ஆலை பலரின் சதியால் மூடப்பட்டுள்ளது. மீண்டும் திறக்கப்பட்டுவிடும் என்ற எங்களது நம்பிக்க உச்ச நீதிமன்ற தீா்ப்பால் தகா்க்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம், எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளன.
எனவே, அரசு சாா்பில் ஒரு வல்லுநா் குழுவை அமைத்து, ஆலையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதை சரிசெய்து மீண்டும் இந்த ஆலையை திறக்க உதவி செய்ய வேண்டும். இங்கு இயங்கிய மின் உற்பத்தி ஆலையையும் மீண்டும் இயக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...