நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூா் புளியடி சந்தனமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் புளியடித் தெருவில் உள்ள ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 10:33 pm

Din

திருச்செந்தூா் புளியடித் தெருவில் உள்ள ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், கும்ப பூஜைகள் நடைபெற்று, விமான அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சந்தனவிநாயகா், சந்தனமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை விழா கமிட்டித் தலைவா் சு. வெங்கடாசலம், செயலா் ரா. பாலசுப்பிரமணியன், பொருளாளா் சி. காா்த்திக், முன்னாள் தலைவா் ச. குமாா் உள்ளிட்ட கமிட்டியினா் செய்திருந்தனா்.