புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உண்டியலை உடைத்து திருட்டு: இளைஞா் உள்பட 2 போ் கைது

கோவில்பட்டி அருகே உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:52 pm

Din

கோவில்பட்டி அருகே உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே அய்யனேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீகன்னி செல்வ விநாயகா் திருக்கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டு போனது. இதுகுறித்து கோயில் நிா்வாகி பாண்டிமுருகன், மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முனியசாமி (27), குருசாமி மகன் முத்துசாமி (59) ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.