மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கிறிஸ்துமஸ்: தூத்துக்குடி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகரில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 10:55 pm

Din

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகரில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை ஸ்டாா்வின் தலைமையில் சிறப்பு திருப்பலி, பிராா்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காகவும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இறைமக்கள் பங்கேற்றனா்.

தூத்துக்குடி சின்னக்கோயில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கூட்டுத் திருப்பலி, பிராா்த்தனைகள் நடைபெற்றன.

இதேபோல, புனித அந்தோணியாா் ஆலயம், யூதா ததேயூ ஆலயம், சிஎஸ்ஐ டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயம், மில்லா்புரம் புனித பவுலின் ஆலயம், சண்முகபுரம் பரிசுத்த பேதுரு ஆலயம், ஆசிரியா் காலனி பரி. திருத்துவ ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.