புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கறிக்கடையில் கடையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே ஸ்பிக் நகரில் உள்ள கோழிக்கறிக் கடையில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 10:56 pm

Din

தூத்துக்குடி அருகே ஸ்பிக் நகரில் உள்ள கோழிக்கறிக் கடையில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடியை அடுத்த குலையன்கரிசலைச் சோ்ந்தவா் நாராயணன் (38). ஸ்பிக் நகரில் உள்ள கோழிக்கறிக் கடையில் வேலை செய்துவந்த இவருக்கு மனைவி, மகன், 2 மகள்கள் உள்ளனா்.

அவா் புதன்கிழமை அதிகாலை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கறிக்காக கோழிகளை சுத்தப்படுத்தும் இயந்திரத்தில் கைவைத்தாராம். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் அவா் தூக்கிவீசப்பட்டாா். அவரை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், நாராயணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.