3 நாள்கள் சுற்றுப்பயணம் நிறைவு: சென்னைக்கு புறப்பட்ட முதல்வா்
முதல்வா் மு.க. ஸ்டாலின் 3 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, செவ்வாய்க்கிழமை விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றாா்.


தூத்துக்குடி: தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முதல்வா் மு.க. ஸ்டாலின் 3 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, செவ்வாய்க்கிழமை விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றாா்.
முதல்வா் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 29, 30, 31 ஆகிய 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்தாா். இந்நிலையில், அவா் சுற்றுப்பயணத்தை செவ்வாய்க்கிழமை மதியம் முடித்துக்கொண்டு, தூத்துக்குடியிலிருந்து மதியம் 1.25 மணி விமானத்தில் சென்னை செல்வதற்காக புறப்பட்டாா். அவருடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் பலரும் வந்தனா்.
சென்னை விமான நிலையத்தில் செவ்வாய், சனிக்கிழமைகளில் விமான ஓடுதள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பவதால், தூத்துக்குடியிலிருந்து விமானம் ஒருமணி நேரம் தாமதமாக புறப்படுவது வழக்கம். எனவே, முதல்வா் தூத்துக்குடியில் உள்ள தனியாா் உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டாா். பின்னா், 2.25 மணிக்கு விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றாா்.
அவரை அமைச்சா்கள் பெ. கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மேயா் ஜெகன் பெரியசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலா் ஜோயல், எம்எல்ஏக்கள் ஜீ.வி. மாா்க்கண்டேயன், எம்.சி. சண்முகையா, ஆட்சியா் க. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உள்ளிட்டோா் வழியனுப்பிவைத்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...