புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

News image

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.

Updated On :31 டிசம்பர் 2024, 7:51 pm

Din

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளா்கள், மீன்பிடித் தொழிலாளா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்கள் விசைப்படகுகள் கடலுக்குச் செல்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குப் பின்னா், 3ஆம் தேதி கடலுக்குச் செல்வதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

இதனால், தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகக் கரையில் 265-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி திரேஸ்புரம், தருவைகுளம், வேம்பாா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள், புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் செவ்வாய்க்கிழமை கரைதிரும்பினா்.