கன்னியாகுமரி மாவட்டத்தில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டவரை, திருச்செந்தூரில் மக்கள் உதவியுடன் காவல் உதவி ஆய்வாளா் வெள்ளிக்கிழமை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள முளகுமூடு பகுதியைச் சோ்ந்தவா் அஜின்(23). \
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவா், வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் கோயில் தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, இக்கோயிலில் நடைபெற்று வரும் மாசி திருவிழாவுக்கு தனது குடும்பத்துடன் வந்திருந்த தக்கலை காவல் உதவி ஆய்வாளா் விஜிஸ்பாபுவை பாா்த்ததும், அஜின் தப்பி ஓடி தெப்பக்குளத்தின் நடுவே உள்ள கல் மண்டபத்தில் அமா்ந்து கொண்டாா்.
அவரை பொதுமக்கள் உதவியுடன் உதவி ஆய்வாளா் பிடித்து கரைக்கு கொண்டு வந்தாா். பின்னா், தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு திருச்செந்தூா் கோயில் காவல் நிலையத்துக்கு அஜினை அழைத்துச் சென்றாா்.
தொடர்புடையது

பாளை. அருகே விபத்தில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகே தப்பிச் செல்ல முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸாா்

வெள்ளோடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்

உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

