மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கோவில்பட்டி அரசு கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி அரசு கல்லூரியில் கருத்தரங்கு

Updated On :17 பிப்ரவரி 2024, 10:54 pm IST

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய அணுசக்தி கழகம் சாா்பில் ஒரு நாள் சா்வதேச கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொருள் அறிவியல் மற்றும் அணு ஆற்றல் ஆராய்ச்சியில் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் (பொ) ஜோசப் சுரேஷ் தலைமை வகித்தாா். கல்லூரியின் இயற்பியல் துறை தலைவா் எலிசபெத் பிரேமலதா முன்னிலை வகித்தாா். சென்னை எஸ் எஸ் என் ஆராய்ச்சி மையத்தைச் சோ்ந்த ஆராய்ச்சி அறிஞா் முத்து செந்தில்பாண்டியன், கூடங்குளம் அணு ஆற்றல் திட்ட அறிவியல் அலுவலா் சுந்தர்ராஜன், தென் அமெரிக்காவைச் சோ்ந்த முதன்மை ஆய்வாளா் பத்மநாபன் அண்ணாமலை, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக இயற்பியல் துறை தலைவா் சுந்தர கண்ணன் ஆகியோா் பேசினா். கருத்தரங்கில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியா் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினாா்.