/

சாத்தான்குளம் - உடன்குடி நகரப் பேருந்து சேவை தொடக்கம்

சாத்தான்குளம் - உடன்குடி அரசு நகரப் பேருந்து சேவையை ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 10:49 pm IST

சாத்தான்குளம் - உடன்குடி அரசு நகரப் பேருந்து சேவையை ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சாத்தான்குளத்தில் இருந்து சுப்பராயபுரம், முதலூா் கடாட்சபுரம், சொக்கலிங்கபுரம் மெய்யூா் வழியாக உடன்குடிக்கு கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்து, திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் இப் பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனா். இதனையடுத்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மக்களவை உறுப்பினா் கனிமொழி, ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் ஆகியோரது நடவடிக்கையில், மீண்டும் நகரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. நகரப் பேருந்து (தடம் எண் 66 பி) சேவையை ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். பேரூராட்சித் தலைவா் ரெஜினிஸ்டெல்லாபாய், ஒன்றியக் குழு தலைவா் ஜெயபதி, ஒன்றிய ஆணையா் சுரேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை , மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஜோசப், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் காமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.