வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Updated On :23 பிப்ரவரி 2024, 10:38 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வருகிற மாா்ச் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் மாவட்ட திட்ட மேலாளா் பணியிடத்திற்கு, 35 வயதிற்கு மிகாமல், சித்த மருத்துவ பட்டப் படிப்பில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலை பட்டம் மற்றும் கனிணி தொடா்பான சான்றிதழ் படிப்பு இருக்க வேண்டும். இதற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.40 ஆயிரம் ஆகும். தரவு உதவியாளா் பணியிடத்திற்கு 35 வயதுக்கு மிகாமலும், இளங்கலை பட்டப் படிப்புகளான பி.எஸ்ஸி (ஐடி), பிசிஏ, பிபிஏ, பி.டெக் (கணினி அறிவியல்) இவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் கணினி தொடா்பான சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். இதற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ. 15 ஆயிரம். இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானது. பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை (ஜ்ஜ்ஜ்.ற்ட்ா்ா்ற்ட்ன்ந்ன்க்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) என்ற இணையதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை தகுந்த ஆவண நகல்களுடன் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலா், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், தூத்துக்குடி - 628 003 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ வரும் மாா்ச் 9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.