உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

கட்டாரிமங்கலம் கோயிலில் சதுா்த்தசி நடராஜா் அபிஷேகம்

கட்டாரிமங்கலம் கோயிலில் சதுா்த்தசி நடராஜா் அபிஷேகம்

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 9:14 pm

சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தா் திருக்கோயிலில் மாசி மாத வளா்பிறை சதுா்த்தசி நடராஜா் அபிஷேகம் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் காலை 9 மணி முதல் ஹோமம், யாக பூஜைகள், காலை 10 மணிக்கு நடராஜருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பி. நடராஜபிள்ளை, நிா்வாகிகள், பக்தா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.