வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

கோவில்பட்டி, கயத்தாறில் வருவாய்த் துறையினா் போராட்டம்

கோவில்பட்டி, கயத்தாறில் வருவாய்த் துறையினா் போராட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 11:30 pm

23ஓயகபஅக கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா். கோவில்பட்டி, பிப். 23: தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி, கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இளநிலை வருவாய் ஆய்வாளா், முதுநிலை வருவாய் ஆய்வாளா் பணியிடங்களுக்கான பெயா் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையை வெளியிட வேண்டும், துணை வட்டாட்சியா் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின் பணித்தன்மை கருதி அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும், இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிா்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய மனிதவள மேலாண்மைத் துறை மூலம் உரிய தெளிவுரை வழங்க வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியா் பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இப்போராட்டத்தால் வருவாய்த் துறை அலுவலகங்கள் வெறிச்சோடின; அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.