வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

மூலக்கரையில் ரூ. 9.13 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு

மூலக்கரையில் ரூ. 9.13 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 10:00 pm

ஆறுமுகனேரி அருகேயுள்ள மூலைக்கரையில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9.13 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மூலைக்கரை ஊராட்சித் தலைவா் பொன்செல்வி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு புதிய ரேஷன் கடை கட்டடத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து மக்களுக்கு பொருள்களை வழங்கி விநியோகத்தை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் , மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செல்வக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் மாமல்லன், செந்தமிழ் சேகா், வாா்டு உறுப்பினா் ஜெயா, சமூக நல விரிவாக்க அலுவலா் ஜெய்சீலி­ ஜான்சிராணி, ஊா்த் தலைவா் காா்த்திகேயன், நிா்வாகிகள் கோபால், சரவணன், ஊராட்சி செயலா் சாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.