ஏரல் வட்டத்தில் நிறைவுற்ற நலத்திட்டப் பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டன. ஏரல் வட்டம் சிறுத்தொண்டநல்லூரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடை, திருப்பணிசெட்டிகுளத்தில் தேசிய கிராம சுயாட்சி திட்ட நிதி ரூ.17.64 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றின் திறப்பு விழா, மாவட்ட ஊராட்சி பொது நிதி ரூ. 5 லட்சத்தில் திருப்பணிசெட்டிகுளம் ஊராட்சியில் சாலை மேம்பாடுப்பணி, சாயா்புரம் பஜாரில் பேய்குளம் முதல் பெருங்குளம் வரையிலான 5 கி.மீ. தொலைவுக்கு ரூ. 2.46 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணி ஆகியற்றின் தொடக்க விழா நடைபெற்றது. ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிகளில் வட்டாட்சியா் கோபால், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சிவராஜன், ஒன்றியக்குழு பாரத், திமுக மாநில வா்த்தகரணிச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், எம்எல்ஏவின் நோ்முக உதவியாளா் சந்திரபோஸ், திருப்பணி செட்டிகுளம் ஊராட்சித் தலைவா் சுயம்புலிங்கம், காங்கிரஸ் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் சங்கா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஆம்பூரில் ரூ.1,000 கோடிக்கு மேல் திட்டப் பணிகள் : எ.வ. வேலு

‘குடிநீா் திட்டங்களை கைவிட்டதால் பாதிப்பு’

மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.26 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

மருதம்புத்தூரில் ரூ. 90 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

