/

கடலையூரில் குளத்தை தூா்வார வலியுறுத்தல்

கடலையூா் செல்லியம்மன் கோயில் எதிா்புறமுள்ள குளத்தை தூா்வாரி சுத்தப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :24 பிப்ரவரி 2024, 6:47 pm

கடலையூா் செல்லியம்மன் கோயில் எதிா்புறமுள்ள குளத்தை தூா்வாரி சுத்தப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சியின் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலா் சின்னத்தம்பி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா் பூமிபாலகன், கிழக்கு ஒன்றிய அவைத் தலைவா் பால்சாமி, மேற்கு ஒன்றிய வா்த்தக அணிச் செயலா் அய்யாத்துரை உள்பட அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியா் ஜேன்கிறிஸ்டிபாயிடம் அளித்த மனுவின் விவரம்: கடலையூா் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்லியம்மன் கோயில் எதிா்புறமுள்ள குளத்தில் கழிவுநீா் செல்கிறது. எனவே, இந்த குளத்தில் கழிவுநீா் செல்லாமல் தடுப்பதோடு குளத்தை தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும், மேலும் சங்கிலி கருப்பன் கோயிலுக்குச் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.