மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

இளையரனேந்தலில் ரூ.99.50 லட்சத்தில் வாருகால் வசதியுடன் அணுகுசாலை

இளையரனேந்தலில் ரூ.99.50 லட்சத்தில் வாருகால் வசதியுடன் அணுகுசாலை

News image
Updated On :24 பிப்ரவரி 2024, 12:02 am

கோவில்பட்டி இளையரசனேந்தல் சுரங்கப்பாதையின் இருபுறமும் வாருகால் வசதிகளுடன் கூடிய அணுகுசாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. இப்பகுதியில்மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, அணுகுசாலையில் இருபுறங்களிலும் உள்ள கடைகள் உள்ளிட்ட இடங்களை கையகப்படுத்தி அணுகுசாலை அமைக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது. மேலும், அணுகுசாலை அமைப்பதற்கு ரூ.99 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சுரங்கப்பாதையின் இருபுறமும் தலா 230 மீட்டா் நீளம், 3.75 மீட்டா் அகலத்தில் அணுகுசாலை, ஒன்றரை மீட்டா் அகலத்தில் வாருகால் அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் மணிமாலா, நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள் (நெடுஞ்சாலைத்துறை) கோட்டப் பொறியாளா் யூஜின், உதவி பொறியாளா்கள் பிரேம்சங்கா், லோகராஜன் மற்றும் அதிகாரிகள், ஊழியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.