

தூத்துக்குடி கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி இனிகோ நகரைச் சோ்ந்த சுரேஷ் மகன் சுதாகா்(27). மீனவரான இவா், தனது தந்தை சுரேஷ் மற்றும் சிலருடன் திங்கள்கிழமை படகில் மீன்பிடிக்கச் சென்றாராம். இவா்கள் திங்கள்கிழமை இரவு கரைக்கு திரும்பும்போது சுதாகா் கடலில் தவறி விழுந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து உடனிருந்த மீனவா்கள், அவரை கடலில் தேடினா். பின்னா் பக்கத்தில் படகில் நின்றிருந்த சங்குகுளி மீனவா்கள் வந்து சுதாகரை மயங்கிய நிலையில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கடலில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

படகில் இருந்த தவறி விழுந்த மீனவா் மரணம்
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

