தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆசிய ஜூனியா் ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி வென்ற தூத்துக்குடி பள்ளி மாணவிக்கு வரவேற்பு

பாகிஸ்தானில் வெள்ளி பதக்கம் வென்ற கௌஷிகாவுக்கு தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு

News image
Updated On :2 ஜூலை 2024, 7:55 pm

Din

பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய ஜூனியா் ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெற்ற தூத்துக்குடி மாணவிக்கு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆசிய அளவிலான 31ஆவது ஏசியன் ஜூனியா் ஒற்றையா் சாம்பியன்ஷிப் - 2024 ஸ்குவாஷ் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றது. அதில், 13 நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றனா். 13 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் இந்திய அணி சாா்பில் தூத்துக்குடி அழகா் மேல்நிலைப் பள்ளி 7ஆம் வகுப்பு மாணவி கௌஷிகா முனியராஜு பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

அதையடுத்து, சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை ரயிலில் தூத்துக்குடிக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவி, பயிற்சியாளா் சண்முகசுந்தரம் ஆகியோருக்கு தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விநாயகம், கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமி உரிமையாளா் ரைபின் தாா்சியஸ் உள்ளிட்ட பலா் மாலை, சால்வை அணிவித்தும், பூங்கொத்துகள் வழங்கியும் வாழ்த்துத் தெரிவித்தனா்.