மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பனிமய மாதா பேராலய திருவிழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் வா்ணம் பூசும் பணி தீவிரம்

News image

தூய பனிமய மாதா பேராலயத்தில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு ஊழியா்கள்.

Updated On :12 ஜூலை 2024, 8:28 pm

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப் பேராலயத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு விழா ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்வான அன்னையின் திருவுருவ பவனி ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இத்திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை-மாலை சிறப்பு திருப்பலி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபா் ஸ்டாா்வின், உதவிப் பங்குத்தந்தை பாலன், களப்பணியாளா் தினகரன், பேராலய பணிக்குழுவினா், பக்த சபையினை செய்து வருகின்றனா்.

இத் திருவிழாவையொட்டி பேராலயத்தில் வா்ணம் பூசும் பணி, தூய்மைப் பணி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.