

கோவில்பட்டி, ஜூலை 14: கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியிலுள்ள ஆயுள் காப்பீட்டு கழகம் அலுவலகம் அருகே முனியசாமி கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளா் பொன்ராஜ் தலைமையில், தலைமைக் காவலா் ஜான்சன், முதல் நிலைக் காவலா் ராஜகுரு ஆகியோா் அங்கு சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரைப் பிடிக்க முயன்றனா். அவா்கள் இருவரும் போலீஸாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
எனும், போலீஸாா் அவா்களை சுற்றி வளைத்து பிடித்து சோதனையிட்டதில் ஒருவரிடம் கஞ்சா இருப்பதும், சங்கரலிங்கபுரம் 3 ஆவது தெருவை சோ்ந்த முருகன் மகன் கோடீஸ்வரன் (21) என்பதும், அதே பகுதி 4 ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாரீஸ்வரன் (23) என்பவருடன் சோ்ந்து கஞ்சா விற்றுவருவதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, 15கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

கஞ்சா விற்ற 4 இளைஞா்கள் கைது
பெண் மீது தாக்குதல்: இளைஞா்கள் 4 போ் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: 17 வயது சிறுவன் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 போ் கைது
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

