தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முதல்வரின் காலை உணவுத் திட்டம் தூத்துக்குடியில் கனிமொழி தொடங்கி வைத்தாா்

முதல்வரின் காலை உணவுத் திட்டம் தூத்துக்குடியில் தொடங்கி வைத்தாா் கனிமொழி எம்.பி.

News image

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவா்-மாணவிகளுடன் உணவருந்திய கனிமொழி எம்.பி. உடன், அமைச்சா் பெ.கீதா ஜீவன், மேயா் ஜெகன்பெரியசாமி உள்ளிட்டோா்.

Updated On :15 ஜூலை 2024, 9:59 pm

Din

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆரோக்கியபுரம் வி.வி.டி. நினைவு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் முன்னிலை வகித்தாா். மக்களவை உறுப்பினா் கனிமொழி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவா்-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்து, அவா்களுடன் அமா்ந்து உணவருந்தினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: தொடக்கப் பள்ளி மாணவா் - மாணவிகளுக்கு காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தமிழகத்தில் உள்ள குழந்தைகளின் எதிா்காலம் கருதி அவா்கள் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக கல்வி பயிலக்கூடிய தலைமுறையாக உருவாக வேண்டும் எனபதற்காக காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, வருவாய் கோட்டாட்சியா் ம.பிரபு, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவா் ரா.சரவணகுமாா், ஆரோக்கியபுரம் வி.வி.டி. நினைவு தொடக்கப் பள்ளி செயலா் த.பிரம்மானந்தம், மகளிா் திட்ட அலுவலா் மல்லிகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரெஜினி உள்பட பலா் பங்கேற்றனா்.