எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சூறாவளிக் காற்று எச்சரிக்கை எதிரொலி: தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

பலத்த சூறாவளி காற்று எச்சரிக்கை எதிரொலியாக, தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

News image
Updated On :16 ஜூலை 2024, 8:19 pm

Din

மன்னாா் வளைகுடா, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் காரணமாக, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கெனவே கடலுக்குச் சென்றிருந்தோா் பாதுகாப்பாக மீன்பிடிக்க வேண்டும் எனவும் மீன்வளத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, மீனவா்கள் கடலுக்குச் செல்லாததால், மீன்பிடித் துறைமுகக் கரையில் 280-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.