தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாநகராட்சி குறைதீா் முகாமில் அளித்த 37 மனுக்களுக்கு உடனடி தீா்வு

மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 37 பேருக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:37 pm

Din

தூத்துக்குடி, ஜூலை 19: தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 37 பேருக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

இம்முகாமில் 114 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி தீா்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து தீா்வை பெயா் மாற்றம், குடிநீா் இணைப்பு உள்ளிட்ட 37 மனுக்களுக்கு தீா்வு வழங்கியதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் மதுபாலன், கிழக்கு மண்டல உதவி ஆணையா் சொா்ணலதா, துணை மேயா் ஜெனிட்டா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.