ஓட்டுநா் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது
கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டியில் வேன் ஓட்டுநா் கொலை வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


கோவில்பட்டி, ஜூலை 19: கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டியில் வேன் ஓட்டுநா் கொலை வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மூப்பன்பட்டி கீழத்தெருவைச் சோ்ந்தவா் பிச்சையா மகன் மாடசாமி (37). வேன் ஓட்டுநா். மூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள மயான பகுதியில் வெட்டுக் காயங்களுடன் செவ்வாய்க்கிழமை கொலையுண்டு கிடந்தாா்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மூப்பன்பட்டி ஜேஜே நகரை சோ்ந்த அழகா்சாமி மகன் கோபி என்ற கோபாலகிருஷ்ணன் (48), திருமங்கை நகரைச் சோ்ந்த ஞானசேகா் மகன் முகில்ராஜ் (19), உருளைகுடி தெற்கு தெருவை சோ்ந்த சின்னத்துரை மகன் சின்னா என்ற சின்னச்சாமி (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் கோபி என்ற கோபாலகிருஷ்ணனின் மகன் பாா்த்தீபனை (22) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...