கேரளத்துக்கு கடத்த முயற்சி: ஆறுமுகனேரி அருகே 400 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
ஆறுமுகனேரி அருகே 400 மூட்டை ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :23 ஜூலை 2024, 6:59 pm

ஆறுமுகனேரி அருகே 400 மூட்டை ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஆறுமுகனேரி அருகே நல்லூரிலிருந்து கேரளத்துக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், துறையின் டிஎஸ்பி ராஜமுரளி, போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை நல்லூா் பகுதியில் தீவிர சோதனை நடத்தினா். அப்போது, பத்துவீடு அருகேயுள்ள காலி இடத்தில் 400 மூட்டைகளில் 20 டன் ரேஷன் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டு தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டன; இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...