மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்குக் கடத்திச் செல்ல முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி தலைமையில் ஓட்டுநா் ஜான்பிரைட் ஆகியோா் அடங்கிய அதிகாரிகள் குழுவினா், வெள்ளிக்கோடு பகுதியில் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்த சைகை காட்டிய போது காா் நிற்காமல் சென்றது. காரை அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று, இரவிபுதூா்கடையில் வைத்து மடக்கிப் பிடித்து சோதனை செய்தனா். காா் ஓட்டுநா் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
அதைத்தொடா்ந்து காரை சோதனை செய்தபோது அதில் 1,500 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கிவைத்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. காருடன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிப கழக கிட்டங்கியிலும், காரை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

காட்டுமன்னாா்கோவில் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை அருகே 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


