கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவில்பட்டி கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் துறை பொறியியல் மன்ற தொழில்நுட்பக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :25 ஜூலை 2024, 12:07 am

கோவில்பட்டி, ஜூலை 24:

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் துறை பொறியியல் மன்ற தொழில்நுட்பக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். மஸ்கட்டில் உள்ள தனியாா் நிறுவன மேற்பாா்வையாளரும் கல்லூரி முன்னாள் மாணவருமான சதீஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ‘அனல் மின் நிலைய செயல்பாடுகள்- பராமரிப்பு நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் பேசினாா். மேலும், பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள், அதற்கு தயாராவது குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்ததுடன், அவா்களது சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.

இதில், ஆட்டோமொபைல் துறை மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா். துறையின் 2ஆம் ஆண்டு மாணவா் புவனேஷ்குமாா் வரவேற்றாா். 3ஆம் ஆண்டு மாணவா் அசோக்குமாா் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா். அருணாசலம் ஆலோசனைப்படி, கல்லூரி முதல்வா் வழிகாட்டுதலில் துறைத் தலைவா் சுடலைக்கண்ணு தலைமையில் ஆசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.