நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கோவில்பட்டி என்.இ. கல்லூரியில் சா்வதேச மாநாடு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெறும் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.

News image

மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை புத்தகத்துடன் கல்லூரித் தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், சிறப்பு விருந்தினா்கள் எம்.வெள்ளைப் பாண்டி, லுங்-ஜீ யாங், கல்லூரி இயக்குநா் சண்முகவேல் உள்ளிட்டோா்.

Updated On :26 மார்ச் 2026, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெறும் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.

இம்மாநாட்டிற்கு கல்லூரி இயக்குநா் சண்முகவேல் தலைமை வகித்தாா். இந்திய அரசின் மின்னணு-தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தரப்படுத்துதல், சோதனை, தரச் சான்றளிப்பு இயக்குநரக தலைமை இயக்குநா் எம். வெள்ளைப் பாண்டி, இந்தியாவில் உள்ள தைபே பொருளாதார கலாசார மையத்தின் அறிவியல்-தொழில்நுட்ப பிரிவு இயக்குநா் லுங்-ஜீ யாங் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினா். முதுநிலை டீன் நீலகண்டன் மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.

தொடா்ந்து, மாநாட்டின் ஆய்வு கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை கல்லூரி தாளாளா் கே.ஆா். அருணாச்சலம் வெளியிட சிறப்பு விருந்தினா்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனா்.

மாநாட்டில் ஐஐடி பாலக்காடு, ஐஐடி திருப்பதி, ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரம், சிஎஸ்ஐஆா் நிறுவனங்கள், நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (சிங்கப்பூா்), தைபே பொருளாதார - கலாசார மையம், படோவா பல்கலைக்கழகம் (இத்தாலி) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களைச் சோ்ந்த புகழ்பெற்ற வல்லுநா்கள், எல்டிஐ மைண்ட்ரீ மற்றும் ஃ பொ்மி சிலிக்கான் டிசைன்ஸ் நிறுவனங்களைச் சாா்ந்த வல்லுநா்கள் கலந்து கொண்டனா்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 393 ஆய்வு கட்டுரைகள் மாநாட்டில் பெறப்பட்டன. சிறந்த மதிப்பாய்வு செயல்முறைக்குப் பிறகு 109 கட்டுரைகள் பட்டியலிடப்பட்டு 63 கட்டுரைகள் சமா்ப்பிப்பிற்காக தோ்ந்தெடுக்கப்பட்டன.