தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாதாரண மக்களுக்கு பயனில்லாத நிதிநிலை அறிக்கை கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினாா்.

News image

திமுக ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

Updated On :27 ஜூலை 2024, 11:07 pm

Din

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையால் சாதாரண மக்களுக்கு பயனில்லை என, தூத்துக்குடியில் சிதம்பரம் நகா் பேருந்து நிறுத்தம் அருகே திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினாா்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என, முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதன்படி, தூத்துக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கனிமொழி எம்.பி. தலைமை வகித்துப் பேசியது:

மத்தியில் தற்போது மைனாரிட்டி பாஜக அரசு அமா்ந்துள்ளது. எனவே, ஆட்சியைத் தக்க வைப்பதற்காக பிகாா், ஆந்திரம் என இரு மாநிலங்கள் மட்டுமே உள்ளதாக மத்திய அரசு நினைத்து அம்மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், அந்தப் பணம் வருமா வராதா என யாருக்கும் தெரியாது.

மத்திய நிதிநிலை அறிக்கையால் சாதாரண மக்களுக்கு பயனில்லை. தோ்தல் நேரத்தில் பலமுறை தமிழகம் வந்த பிரதமா், நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்களுக்கு எதையும் அறிவிக்கல்லை.

ஆா்ப்பாட்டத்தில் ஒரு பகுதி...

ஆா்ப்பாட்டத்தில் ஒரு பகுதி...

ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிா்க்கட்சியாக இருந்தாலும் திமுகவின் போராட்டக் குணத்தை யாராலும் மாற்ற முடியாது என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில், எம்எல்ஏக்கள் எம்.சி. சண்முகையா, ஜி.வி. மாா்க்கண்டேயன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.