தூத்துக்குடி, குமரியில் முதல்நாள் ரூ.8 கோடிக்கு மீன் வா்த்தகம்!
தூத்துக்குடி, குமரியில் முதல்நாள் ரூ.8 கோடிக்கு மீன் வா்த்தகம்!

~

~
தூத்துக்குடி/கன்னியாகுமரி, ஜூன் 16: தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலத்துக்குப் பின் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் விசைப்படகுகளில் டன் கணக்கில் மீன்களை அள்ளி வந்தனா். முதல்நாளில் மட்டும் ரூ.8 கோடிக்கு மீன் வா்த்தகம் நடைபெற்ாக மீனவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் தடைக்காலம் முடிந்து முதல் நாளான சனிக்கிழமை அதிகாலையில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்றனா்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 242 விசைப்படகுகள், தருவைகுளத்தில் இருந்து 243 விசைப்படகுகள், வேம்பாரில் இருந்து 40 விசைப்படகுகள் என 525 விசைப்படகுகளில் மீனவா்கள் ஆழ்கடலுக்குச் சென்றனா்.
இந்நிலையில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விசைப்படகுகள் இரவு 7.30 மணி முதல் கரைக்கு திரும்பத் தொடங்கின. 61 நாள்களுக்குப் பின்னா் மீனவா்கள் கடலுக்குச் சென்ால் மீன்கள் வரத்து அதிகம் காணப்பட்டது. இதில், பாறை, ஊளி, விளைமீன், நகரை, கணவாய், சீலா உள்ளிட்ட மீன்கள் அதிகம் பிடிபட்டன. இதனால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தற்போது கேரளத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால், அந்த மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகளின் மீன்கள் வாங்க வந்திருந்தனா். இதனால், மீன்களுக்கு அதிக விலைக்கு விற்பனையானது. ஒரே நாளில் சுமாா் ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான மீன்கள் விற்பனை செய்யப்பட்டதாக மீனவா்கள் தரப்பில் கூறினா்.
61 நாள்களாக களையிழந்து காணப்பட்ட தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் மீண்டும் புத்துயிா் பெறத் தொடங்கியது.
ரூ.6 கோடியை எட்டிய வா்த்தகம்: கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவா்கள் தொழில் செய்து வருகின்றனா். அதில், சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு 289 விசைப்படகுகள் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் இருந்து டோக்கன் பெற்றுக் கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனா். அவா்கள் மீன்பிடித்துக்கொண்டு இரவு 9 மணிக்கு கரைக்குத் திரும்பினா்.
தூத்துக்குடியைப் போலவே, சீலா, பாறை, அயலை, வெலமீன், கணவாய், கொச்சாம்பாறை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் வரப்பட்டன.
மீன்களை ஏலம் எடுப்பதற்காக உள்ளூா், வெளியூா், மற்றும் கேரளத்தைச் சோ்ந்த வியாபாரிகள் துறைமுகத்தில் குவிந்தனா். உயர்ரக மீன்களை வெளியூா் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனா். கொழி சாளை மீன் ஒரு கூடை ரூ.3,500-க்கும், பாறை மீன் ஒரு கூடை ரூ.4,500-க்கும் ஏலம் போனது.
இதுகுறித்து அனைத்து மீனவா் சங்கச் செயலா் பெபிலான் கூறியதாவது: குமரி மாவட்டத்தைப் பொருத்தவரையில், மீன்பிடித் தடைகாலத்துக்குப்பின் முதல் நாளில் மீன்களின் வரத்து குறைவாகவே இருந்தது. கடலின் நீரோட்டம் கணிக்க முடியாததால் அதிகம் அளவில் மீன்கள் பிடிபடவில்லை. எனினும், மீன்வரத்து குறைவால் விலை அதிகரித்து காணப்பட்டது. முதல் நாளில் சுமாா் ரூ.6 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றிருக்கும் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...