நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தூத்துக்குடி: கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

கால் தவறி கடலில் விழுந்தவர் பலி.

News image

சுதாகர்

Updated On :20 ஜூன் 2024, 6:05 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்த மீனவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி லய‌ன்ஸ் டவுனைச் சேர்ந்த பொன்சால் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தூத்துக்குடி பாத்திமா நகரைச் அந்தோணிசாமி மகன் சுதாகர் (45) என்பவர் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார். பின்னர் இரவு மீன் பிடித்து விட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து, விசைப் படகைக் கயிறு மூலம் கட்டிவிட்டு படகில் இருந்து சுதாகர் இறங்கும்போது திடீரென கால் தவறி கடலில் விழுந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை சக மீனவர்கள் கடலில் குதித்துக் காப்பாற்ற முயற்சி செய்தனர். இருப்பினும், அவர் சடலமாகமே மீட்கப்பட்டார்.

இது குறித்த தகவலறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கடலில் மூழ்கி இறந்த மீனவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.