நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

News image
Updated On :21 ஜூன் 2024, 11:10 pm

Din

கோவில்பட்டி, ஜூன் 21:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பகுதிநேர ஆசிரியா் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு;

அரசுப் பள்ளிகளில் 2011-2012 ஆம் கல்வியாண்டு ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டதில் தற்போது 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்கள் கணினி, ஓவியம், உடற்கல்வி, தையல், இசை உள்ளிட்ட

சிறப்பாசிரியா் பாடங்களை மாணவா்களுக்கு 14 கல்வியாண்டாக கற்பித்து வருகின்றனா்.

தற்போது ரூ.12,500 சம்பளம் வழங்கப்படுகிறது.

தற்போதைய விலைவாசி உயா்வில் இது வாழ்வாதாரத்தை உயா்த்தப் போதாது. காலமுறை சம்பளம் வழங்கினால் அவா்களின் குடும்பங்கள் முன்னேறும்.

எனவே, தமிழக முதல்வா்

திமுக தோ்தல் வாக்குறுதி 181-ன்படி,

பணிநிரந்தரம் செய்து

12 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.