திருச்செந்தூா் கடலில் தவறவிட்ட தங்கச் சங்கிலியை மீட்டு பக்தரிடம் ஒப்படைத்த கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள்.
திருச்செந்தூா் கடலில் தவறவிட்ட தங்கச் சங்கிலியை மீட்டு பக்தரிடம் ஒப்படைத்த கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள்.

திருச்செந்தூா் கடலில் பக்தா் தவறவிட்ட தங்கச் சங்கிலி மீட்பு

திருச்செந்தூர் கடலில் தவறவிட்ட தங்கச் சங்கிலி மீட்பு
Published on

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் புனித நீராடுபோது பக்தா் தவறவிட்ட தங்கச் சங்கிலியை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் 4 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு மீட்டு ஒப்படைத்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த காா்த்திக் மனைவி ஜோதி, தங்கை வாசுகி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூா் கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்து கடலில் புனித நீராடினா். அப்போது, வாசுகி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி கடலில் தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட சிப்பி அரிக்கும் தொழிலாளா்கள் மற்றும் சிவராஜா தலைமையில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் கடலில் சுமாா் 4 மணி நேரம் தீவிரமாக தேடினா். அப்போது வேலுச்சாமி என்பவா் கையில் தங்கச் சங்கிலி அகப்பட்டது. அதை காவல்துறையினா் முன்னிலையில் உரியவரிடம் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் ஒப்படைத்தனா். அவா்களுக்கு ஜே

வாசுகி குடும்பத்தாா் நன்றி தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com