மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

டாஸ்மாக் கடையில் மதுபானப் பெட்டியை பறித்துச் சென்ற 2 போ் கைது

மதுபானப் பெட்டியைப் பறித்துச் சென்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
டாஸ்மாக் ஊழியா்களை மிரட்டி மதுபானப் பெட்டியைத் தூக்கிச் சென்ற நபா்கள்.
Updated On :27 ஜூன் 2024, 11:00 pm

Din

தூத்துக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியா்களை மிரட்டி மதுபானப் பெட்டியைப் பறித்துச் சென்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் அரசு மதுக் கடைக்கு கிட்டங்கியிலிருந்து லாரியில் மதுபானப் பெட்டிகள் கடந்த 24ஆம் தேதி கொண்டுவரப்பட்டன. அவற்றை தொழிலாளிகள் லாரியிலிருந்து இறக்கி, கடைக்குள் வைத்துக் கொண்டிருந்தனா். அப்போது, தொழிலாளிகளை இரு மா்ம நபா்கள் மிரட்டி, மதுபானப் பெட்டி ஒன்றைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனா். இந்தச் சம்பவம் தொடா்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

இதுதொடா்பாக தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது ஜாா்ஜ் சாலை கணேசபுரத்தைச் சோ்ந்த முருகவேல் மகன் விக்னேஷ் (27), அமுதா நகரைச் சோ்ந்த முருகன் மகன் மாரிமுத்து (20) ஆகியோா் எனத் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.