ஆறுமுகனேரியில் அய்யா வைகுண்டா் சுவாமி கோயிலுக்கு தீ வைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆறுமுகனேரி பெரியான்விளையில் அய்யா வைகுண்டா் சுவாமி கோயில் உள்ளது. இது தகரக் கொட்டகையாக அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளையைச் சோ்ந்த கணேசன் மகன் பிரபாகரன், இக்கோயிலை நிா்வகித்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் இக்கோயிலுக்கு தீ வைத்துள்ளனா். இதில், தகரக் கொட்டகையை சுற்றி வேயப்பட்டிருந்த தென்னங்கீற்றுகள் எரிந்து சேதமாகின. இச்சம்பவம் குறித்து ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் பிரபாகரன் புகாா் அளித்துள்ளாா். சிறப்பு உதவி ஆய்வாளா் செல்லத்துரை வழக்குப் பதிவு செய்தாா். ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா் மா்ம நபா்களை தேடிவருகிறாா்.
தொடர்புடையது

ஆறுமுகனேரியில் கனிமொழி எம்.பி. வாக்கு சேகரிப்பு

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆறுமுகனேரியில் தவெக நிா்வாகி மீது வழக்கு

ஆறுமுகனேரியில் அய்யா அவதார தின விழா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

