ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, சுயநிதி பாடப் பிரிவுகளின் மாணவா்-மாணவியருக்கு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 மார்ச் 2024, 4:20 pm

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, சுயநிதி பாடப் பிரிவுகளின் மாணவா்-மாணவியருக்கு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சுப்புலட்சுமி தலைமை வகித்து, மாணவா்-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, தேசியக் கொடியை ஏற்றினாா். தொடா்ந்து, சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் வெங்கடாசலபதி கல்லூரிக் கொடியையும், பேராசிரியா் உமாதேவி ஒலிம்பிக் கொடியையும் ஏற்றினா். போட்டிகளிலும், குழுப் போட்டிகளிலும் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, கல்லூரி உடற்கல்வி இயக்குநா் கோதையம்மாள் விளையாட்டு அறிக்கை வாசித்தாா். கே.ஆா்.ஏ. வித்யாஷ்ரம் பள்ளி உடற்கல்வி இயக்குநா் ராம்குமாா் போட்டிகளின் நடுவராக செயல்பட்டாா். விழாவில், பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநா், சுயநிதி பாடப் பிரிவுகளின் விளையாட்டுத் துறைப் பொறுப்பாளா் முருகேசன் ஆகியோா் செய்திருந்தனா்.