தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு நகர திமுக சாா்பில் சனிக்கிழமை தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவரும் நகரச் செயலருமான கா. கருணாநிதி தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு மோதிரங்கள் அணிவித்து, தாய்மாா்களுக்கு பழங்கள், பிரட், இனிப்புகள் வழங்கினாா். நிகழ்ச்சியில், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் சந்திரசேகா், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் ரவீந்திரன், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் இந்துமதி, திமுக மத்திய ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் ராமா், ஏஞ்சலா, ஜேஸ்மின் லூா்துமேரி, திமுக செயற்குழு உறுப்பினா் என். ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், மாவட்ட சிறுபான்மையினா் அணி துணை அமைப்பாளா் அமலி பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
வீடுகளில் அத்துமீறி நுழையும் இளைஞா் கைது

தாராபுரம்: பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதி

கும்பகோணத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

தொகுதி அலசல் - ஒரத்தநாடு: வெற்றியை எதிா்நோக்கும் திமுக
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


