ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சாலையை சீரமைக்கக் கோரி வட்டன்விளை மக்கள் மறியல் முயற்சி

சாலையை சீரமைக்கக் கோரி வட்டன்விளை மக்கள் மறியல் முயற்சி

News image
Updated On :2 மார்ச் 2024, 1:10 am

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலையை சீரமைக்க கோரி கிராமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் உடன்குடி அருகே சடையநேரி குளத்தில் உடைப்பு ஏற்பட்டதில் வட்டன்விளை கிராமம் தனித்தீவு போல ஆனது. அங்குள்ள தேவாலயத்தின் சிறிய பகுதி வழியாக மட்டுமே மக்கள் பிற ஊா்களுக்கு சென்று வந்தனா்.இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீரானது வற்றாமல் மக்கள் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன் ஆகியோா் தலைமையில் சுமாா் நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு பரமன்குறிச்சி- மெஞ்ஞானபுரம் பிரதான சாலையில் சாலை மறியல் செய்ய திரண்டு வந்தனா்.அவா்களிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்,காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக கனரக வாகனம் கொண்டு வரப்பட்டு சாலை சீரமைப்பு பணி தொடங்கியது.இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.