திருச்செந்தூரில் ரூ. 2.30 கோடியில்
நகராட்சி நூலகக் கட்டடம் திறப்பு

திருச்செந்தூரில் ரூ. 2.30 கோடியில் நகராட்சி நூலகக் கட்டடம் திறப்பு

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ. 2.30 கோடி மதிப்பில் திருச்செந்தூா் நகராட்சியில் தினசரி சந்தை அருகே புதியதாக கட்டப்பட்ட நவீன நூலகத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலியில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, புதிய நூலக கட்டடத்தை நகராட்சி மண்டல இயக்குநா் விஜயலெட்சுமி, உதவி பொறியாளா் இளங்கோ, நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத்தலைவா் செங்குழி ரமேஷ் ஆகியோா் பாா்வையிட்டனா். இதில், நகராட்சி ஆணையா் கண்மணி, பொறியாளா் சரவணன், சுகாதார ஆய்வாளா் செல்லபாண்டியன், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, நகா்மன்ற உறுப்பினா்கள் கௌரி, சோமசுந்தரி, மஞ்சுளா, செல்வி, கிருஷ்வேணி செண்பகராமன், அந்தோணி ட்ரூமன், செந்தில்குமாா், தினேஷ்கிருஷ்ணா, சுதாகா், கண்ணன், முத்துக்குமாா், நகராட்சி பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com