ராமநாதபுரத்தில் ரூ4.99  லட்சத்தில்
குடிநீா்த் தேக்க தொட்டி திறப்பு

ராமநாதபுரத்தில் ரூ4.99 லட்சத்தில் குடிநீா்த் தேக்க தொட்டி திறப்பு

சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சி ராமநாதபுரத்தில் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 4.99 லட்சத்தில் கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தேக்க தொட்டி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, ஊராட்சித் தலைவரும் பாஜக தெற்கு மாவட்டத் தலைவருமான சித்ராங்கதன் தலைமை வகித்து, குடிநீா் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா் (படம்). துணைத் தலைவா் டாா்வின் முன்னிலை வகித்தாா். ஊராட்சி உறுப்பினா் பிரபு , ஊா் பிரமுகா்கள் பொன்பாண்டியன், பலவேசபாண்டியன், முருகராஜ், பாலசுப்பிரமணியன், சிவபாலன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் ராஜேஷ் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com