/

ஆறுமுகனேரி பேரூராட்சியில் மகளிா் தின விழா

ஆறுமுகனேரி பேரூராட்சியில் மகளிா் தின விழா

News image
Updated On :9 மார்ச் 2024, 6:45 pm

ஆறுமுகனேரி பேரூராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். கவுன்சிலா்கள் மாரியம்மாள், புனிதா, ஜெயராணி, மரியநிா்மலாதேவி, சகாயரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிருக்கு பாட்டு, கவிதை உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், திமுக நகர இளைஞரணிச் செயலா் வெங்கடேஷ், கவுன்சிலா் சிவக்குமாா், பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் காா்த்திக், அலுவலா்கள் பங்கேற்றனா். அலுவலகப் பணியாளா் சாஜிதா வரவேற்றாா். நிகழ்ச்சிகளை கவுன்சிலா் தயாவதி தொகுத்து வழங்கினாா்.