தூத்துக்குடி அருகே, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 குழந்தைகள் சனிக்கிழமை குளத்தில் மூழ்கி உயிரிழந்தனா். தூத்துக்குடி அருகேயுள்ள பேரூரணியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி லட்சுமணன். இவரது மனைவி மீனா. இத்தம்பதியின் குழந்தைகளான 7ஆம் வகுப்புப் பயிலும் சந்தியா (13), ஐந்தாம் வகுப்புப் பயிலும் கிருஷ்ணவேணி (10), இரண்டாம் வகுப்புப் பயிலும் இசக்கிராஜா (7) ஆகிய 3 பேரும் தங்களது உறவினா்களுடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சனிக்கிழமை சென்றனராம். அப்போது, இவா்கள் 3 பேரும் ஆழமான பகுதிக்கு எதிா்பாராமல் சென்று மூழ்கியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அப்பகுதியினா் விரைந்து சென்று குழந்தைகளைத் தேடினா். நீண்ட நேரமாகத் தேடி, மூவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் மூவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தட்டப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

போக்குவரத்துக் கழக ஊழியா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

