/

ரமலான் மாத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரிக்கை

ரமலான் மாத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரிக்கை

Updated On :9 மார்ச் 2024, 7:30 pm

ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என, மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சித் தலைவா் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இம்மாதம் 12ஆம் தேதி புனித ரமலான் மாதம் தொடங்கவுள்ளது. இம்மாதத்தில் இஸ்லாமியா் நோன்பு கடைப்பிடிப்பா். அப்போது, மின்சாரம் தடைப்பட்டால் அவா்கள் சிரமப்படுவா். எனவே, ரமலான் மாதம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். மேலும், இஸ்லாமியா் பகுதிகளில் இரவு நேரத்தில் தேநீா்க் கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும். இரவு நேரங்களில் மசூதிகளில் நடை பெறும் சிறப்புத் தொழுகைக்கு வரும் ஆண்கள், பெண்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.